உக்ரைனுக்கு ஆதரவு – அமேசான் CEO ட்வீட்!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது என்று அமேசான் CEO ஆண்டி ஜாஸ்ஸி ட்வீட்.

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், ஒருபக்கம் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.

இந்த போரால் ரஷ்யா தரப்பில் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் பலியாகிவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவிற்கு வெளியே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு பீரங்கிகள் வரிசையாக நிற்கின்ற நிலையில் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருந்து வருகிறது. உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் போர் தீவிரமாக நடந்து வருகிறது.

உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்பை சேர்ந்த பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில்,  உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது, தொடர்ந்து உதவி செய்யும். நன்கொடைகள், இணைய பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமேசான் CEO ஆண்டி ஜாஸ்ஸி கூறியுள்ளார்.

 

Recent Posts

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

17 minutes ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

2 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

3 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

4 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

4 hours ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

4 hours ago