சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ஸ்பெஷல்.! மிரட்டலாக வெளியான ‘SarkaruVaariPaata’ மோஷன்போஸ்ட்ர்.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பர்த்டே ஸ்பெஷலாக SarkaruVaariPaata படத்தின் மோஷன் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘SarkaruVaariPaata’. இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ். எஸ். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிஎஸ். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தை மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனமான GMB என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து மைத்ரி மூவீ மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் ப்ளஸ் தயாரிக்கிறது.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் SarkaruVaariPaata படக்குழுவினர் மகேஷ் பாபுவின் பிறந்தநாள் பரிசாக படத்தின் மோஷன் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025