சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’ படம் கைவிடப்பட்டதா.?

Published by
Ragi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் ஷூட்டிங் தொடங்கவிருந்த படக்குழுவினரை ரஜினிகாந்த் வேண்டாமென்று கூறி தடை செய்து கொரோனா தொற்று முற்றிலுமாக முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

தீபாவளிக்கு திரைக்கு வரவிருந்த படத்தை பொங்கலுக்கு தள்ளி வைத்தனர். இன்னும் 50% படப்பிடிப்புகள் மீதமிருக்கும் நிலையில் படத்தை கைவிட்டதாகவும், ரஜினிகாந்த் அவர்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து படக்குழுவினர் கூறியதாவது, அண்ணாத்த படத்தை கைவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்றும், அரசின் அனுமதி கிடைத்தவுடன் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…

10 hours ago

“மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்”- தவெக தலைவர் விஜய் அறிக்கை!

சென்னை :  இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

10 hours ago

காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…

11 hours ago

வெறும் காகிதம் மாதிரி இருக்கு! பட்ஜெட் அறிவிப்பு…அண்ணாமலை விமர்சனம்!

சென்னை :  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

11 hours ago

பும்ராவும் இல்லை…ஹர்திக்குக்கும் இல்லை! மும்பை இந்தியன்ஸ்க்கு விழுந்த பெரிய அடி!

சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…

13 hours ago

தமிழக பட்ஜெட் 2025 : மகளிர், மாணவர்கள், வேலைவாய்ப்பு.., மொத்த விவரம் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

14 hours ago