இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படத்தில் சசிகலாவை விமர்சிக்கும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, இந்த படத்தில் இடம் பெற்ற, ‘பணம் கொடுத்தால் ஷாப்பிங் செல்லலாம்’ என சசிக்கலவை விமர்சிப்பது போன்று இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அல்லது யார் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ எழுதப்பட்டது அல்ல என்று லைகா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…