தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனக்கான கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மேலும், கொரோனாவின் இரண்டாம் அலையில் பல்வேறு அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள் என முக்கியமான பல பிரமுகர்கள் மறைந்துவிட்டனர். எனவே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருக்க வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அண்மையில், தமிழ் திரையுலகின் காமெடி நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் தடுப்பூசி குறித்த வதந்தி தீயாக பரவி வந்த நிலையில், சிலர் இவற்றை நம்பினாலும் பலர் இவற்றை பொய்யென மெய்ப்பிக்கும் வகையில் தங்களுக்கான தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனக்கான தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…