24 டன் அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 24 டன் அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக சினிமா கலைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான தொழில்துறை இயங்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்
அதே போல தற்போது சினிமா ஷூட்டிங்கும் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால், துணை நடிகர்கள், உதவி இயக்குனர்கள் என பல சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நடிகர், நடிகைகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், 24 டன் அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக சினிமா கலைஞர்களுக்கு வழங்கியுள்ளார். வேலையின்றி கஷ்டப்படும், உதவி இயக்குனர்கள், 1500-க்கும் மேற்பட்ட நலிந்த சினிமா கலைஞர்கள், மற்ற சினிமாத்துறை சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு இந்த அத்தியாவசிய பொருட்களை கொரோனா நிவாரணமாக பிரித்து கொடுக்க உள்ளனர்.