சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்று இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2005 – ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு,பிரபு, விஜயகுமார், நாசர்,வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது, குறிப்பாக கடத்த 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அதைப்போல் திரையரங்குகளில் அதிகம் ஓடிய படம் என்ற சாதனையும் படைத்தது.
இந்த திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகுவதாகவும், படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகாக நடிப்பார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, ரஜினி நடத்த வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் நடிகர் ராகவலாரன்ஸ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி பரவி வந்த நிலையில், இதற்கு இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் பி.வாசு கூறியது ” சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்தில் கிடையாது. முதல் பாகத்தில் முக்கிய சம்பவம் நடந்திருக்கும் அதைபோல் தான் இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. படத்தில் ராகவ லரான்ஸ் நடிக்கவுள்ளார். தற்போது நடித்துவரும் ருத்ரன் படத்தை முடித்துவிட்டு சந்திரமுகி 2 பாகத்தில் இணைவார்” என்று கூறியுள்ளார்.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…