ராக் ஸ்டார் அனிருத் தனது மொபைல் வால்பேப்பரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வைத்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற (Why This Kolaveri Di) என்ற பாடல் மிகவும் பிரபலமாகி பல சாதனைகளை படைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, மாரி, போன்ற திரைப்படங்களில் இசையமைத்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
அதற்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், பேட்ட, தர்பார், போன்ற படங்களில் இசையமைத்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத் தற்போது 9 திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இந்த நிலையில் அனிருத் அவர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டுள்ளார்.
அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் அவரது கையிலிருந்த மொபைலில் உள்ள வால்பேப்பரை பார்த்த ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.ஆம் அவர் தனது மொபைல் வால்பேப்பரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை தான் வைத்துள்ளார்.இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.இதிலிருந்து அனிருத் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…