நடிகர் மகேஷ் பாபு ரசிகர்களிடம் பேசுகையில், அவருடைய க்ரஷ் தனது மனைவி என்றும், தனது மகனுக்கு படத்தில் நடிக்க விருப்பமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.தற்போது இவர் கமிட்டாகியுள்ள திரைப்படம் “SarkaruVaariPaata” . இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நம்ரிதா என்ற மனைவியும், சித்ரா மற்றும் கௌதம் என்ற பிள்ளைகளும் உள்ளனர். ஏற்கனவே நம்ரிதா நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மகேஷ் பாபு ரசிகர்களிடம் பேசுகையில், ரசிகர் ஒருவர் உங்களுக்கு யாராவது கிரஷ் இருக்கிறதா என்று கேள்வி கேட்க, அதற்கு அவர், ஆம் 26 வயதில் இருந்தது, அதனையடுத்து அவரையே திருமணம் செய்து கொண்டேன், அவர் தான் நம்ரிதா ஷிரோத்கர் என்று கூறியுள்ளார். மேலும் இன்னொரு ரசிகர் நீங்கள் எவ்வாறு நினைவுக்கூர பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க, நல்ல நடிகனாக, என் குழந்தைகளுக்கு அற்புதமான தந்தையாக, என் மனைவிக்கு சிறந்த கணவராக நினைவுக்கூரப்பட வேண்டும் என்று பதிலளித்துள்ளார். மேலும் உங்களுடைய மகனுக்கு படத்தில் நடிப்பதற்கு விருப்பம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவருக்கு விருப்பம் இருக்கிறது என்று தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…