“சூப்பர்மேன்” உடை ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் .!
- 1978-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரீவி நடிப்பில் “சூப்பர்மேன்” திரைப்படம் வெளியானது.
- இப்படத்தில் கிறிஸ்டோபர் ரீவி பயன்படுத்திய உடையை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘”ஜுலியன்” என்ற ஏல நிறுவனம் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்களை நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டன.
1978-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரீவி நடிப்பில் வெளியான “சூப்பர்மேன்” திரைப்படம் மாபெரும் வரவேற்பையும் , வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த ஏலத்தில் சூப்பர் மேனாக இப்படத்தில் கிறிஸ்டோபர் ரீவி பயன்படுத்திய உடையை 1 லட்சத்து 93 ஆயிரத்து 750 டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 37 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றின் உடை அதிக விலைக்கு போனது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. மேலும் இந்த ஏலத்தில் கோஸ்ட்பஸ்டர்ஸ்-2 படத்தில் டேன் அக்ராய்ட் அணிந்திருந்த ஜம்ப்சூட் சுமார் 22 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.