சார்பட்டா பரம்பரை வாத்தியாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சர்பட்டா பரம்பரை படத்தில் ‘ரங்கன் வாத்தியார்’ என்ற கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் பசுபதி. படத்தில் கபிலன் – ரங்கன் வாத்தியார் சைக்கிளில் செல்லும் காட்சி மீம் டெம்ப்ளேட்டாக இருக்கிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பசுபதி அடுத்ததாக அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளார். நடிகை ரோகிணி மற்றும் ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் நடித்த அம்மு அபிராமியும் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. படத்திற்கு இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…