சூப்பரான சேமியா கேசரி – எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்!
ரவையில் தான் கேசரி செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இன்று புதுவிதமாக சேமியாவில் எப்படி கேசரி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- சேமியா
- நெய்
- சர்க்கரை
- உப்பு
- உலர் திராட்சை
- முந்திரி பருப்பு
- தண்ணீர்
- ஏலக்காய் தூள்
- கேசரி பவுடர்
செய்முறை
முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு நெய் ஊற்றி உளர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதன் பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா எடுத்து நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். மற்றொரு சட்டியில் கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து அவியும் வரை கிளறவும். பின் லேசாக ஏலக்காய் சேர்க்கவும், அதன் பின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறவும். அதனுடன் ஒரு ஸ்பூன் நீருடன் கேசரி பொடியை கலந்து சேர்த்து கிளறிவிட்டு, வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறி கடைசியாக சிறிதளவு நெய் விட்டு இறக்கி பரிமாறவும். அட்டகாசமான சேமியா கேசரி வீட்டிலேயே தயார்.