டாக்டர் டிரைலர் ரெடி..! வெளியான சூப்பர் அப்டேட்.!

Default Image

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

DoctorInTheatres

கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

அதன் பின் படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற குழம்பம் ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் நிறுவனம் வரும் அக்டோபர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Doctor

இந்த நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் டாக்டர் படத்தின் டிரைலர்-காக காத்துள்ளனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், டாக்டர் படத்தின் டிரைலர் ரெடியாகிவிட்டதாக படத்தின் எடிட்டர் ஆர்.நிர்மல் இன்ஸ்டாவின் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்