“பொன்னியின் செல்வன்” படத்தின் சூப்பரான அப்டேட்…!செக்கன்ட் பார்ட்டையும் பிளான் பண்ணியாச்சாமே .?

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இதில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் மோகன் பாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.
அந்த வகையில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவெளி இல்லாமல் நடத்தப்பட்டு வரும் படப்பிடிப்பு மார்ச் 5-ம் தேதியோடு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் முடித்து விட்டு அடுத்தாண்டு மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனவே அடுத்தடுத்து மணிரத்னத்தின் கனவு படத்திற்கான அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025