சந்தானம் ரசிகர்களுக்கு “டிக்கிலோனா” படத்தின் சூப்பர் அப்டேட்.!
டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் .
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திலிருந்து கடைகியாக வெளியான பேர் வச்சாலும் வைக்காம’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாளை இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகவுள்ளது.
#Dikkiloona album out tomorrow! ????????????
Stay tuned for the @thisisysr magic! ????@iamsanthanam @karthikyogitw @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @kjr_studios pic.twitter.com/VEcy1Cw4sQ
— Sony Music South (@SonyMusicSouth) February 26, 2021