சிம்புவின் 48-வது படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாண் பிரியதர்ஷன் நடித்துள்ளார். அரசியலை மையமாக வைத்து இந்த திரைப்பட எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சிம்புவின் அடுத்த படத்தையும், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…