தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்…..! நாளை வெளியாகும் பண்டரத்தி புராணம் பாடல்..!

கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆம் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
#Karnan 2nd Single #PandarathiPuranam from Tomorrow 5:03 PM ????@dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @theVcreations @thinkmusicindia pic.twitter.com/C2990EwQqs
— Karnan (@KarnanTheMovie) March 1, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025