அண்ணாத்த படப்பிடிப்பிற்கு ரெடியான சூப்பர் ஸ்டார் .!எப்போ தெரியுமா.?
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாத இறுதியிலிருந்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால் அப்போது ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் .இதனால் கடந்த டிசம்பர் பாதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாத இறுதியிலிருந்து தொடங்க உள்ளதாகவும், அதற்கு ரஜினி ஒப்பு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . சமீபத்தில் நடிகர் ரஜினியை சிறுத்தை சிவா சந்தித்ததாகவும், படப்பிடிப்பு குறித்து பேசியதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.அது மட்டுமின்றி அண்ணாத்த படத்தினை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.