45 ஆண்டுகால திரைப்பயணம்.! நீங்கள் இல்லாமல் நான் இல்லை.! சூப்பர் ஸ்டாரின் நெகிழ்ச்சி பதிவு.!

Default Image

45 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 45 வருடங்களை வெற்றிகரமாக அதுவும் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்தும் விதமாக ரசிகர்கள் அவருக்காக பொதுவான புகைப்படத்தை (Common DP) வெளியிட்டுள்ளனர். அதனை பலரும் வெளியிட்டு தங்கள் வாழ்த்து பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘என்னுடைய திரையுலக பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. ‘ எனவும், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஸ்டேக் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்