சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், ‘ கே.பாலச்சந்தர் சார் ரஜினிகாந்த் எனும் பெயர் மீது நம்பிக்கை வைத்தார். அதனால் அந்த பெயரை தைரியமாக வைத்தார். பைரவி படத்தை கலைஞானம் தயாரித்து இருந்தார். அவரும் நம்பிக்கை வைத்து தயாரித்தார். அதே போல மற்ற தயாரிப்பாளர்களும் நம்பிக்கையோடு தயாரித்தார்கள்.’ என குறிப்பிட்டு, பின்னர், ‘ 16 வயதினிலே படத்தில் பரட்டை எனும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த சமயம் ஒரு தயாரிப்பாளர் ஏவிஎம் ஸ்டூடியோவில் வைத்து குறிப்பிட்ட தொகைக்கு சம்பளம் பேசி விட்டு பின்னர் ஆயிரம் ரூபாய் கம்மியாக கொடுத்திருந்தார்.
அதனால் நான் சூட்டிங் போகாமல் மேக்கப் ஏதும் போடாமல் ஆயிரம் ரூபாய் தந்தால் மேக்கப் போட்டுக் கொள்கிறேன் என பிடிவாதமாக நின்று கொண்டிருந்தேன். உடனே எனக்கு அந்த படத்தில் கதாபாத்திரம் இல்லை எனக்கு ஒரு கூறிவிட்டார். அதனை தொடர்ந்து அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன் .16 வயதினிலே படம் வந்தது பரட்டை கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஏவிஎம் பட நிறுவனமே ஒரு முக்கிய படத்திற்காக என்னை அணுகி பெரிய தொகையை சம்பளமாக கொடுத்தனர். அதில் ஒரு விலை உயர்ந்த வெளிநாட்டு காரை வாங்கினேன். வெளிநாட்டு ஓட்டுநரை தேடினேன். கிடைக்கவில்லை உடனே ஆங்கிலோ இந்தியன் ஓட்டுநரை பணியமர்த்தினேன்.
அப்போது அந்த ஓட்டுநருக்கு புதிய சீருடை கொடுத்தேன். உடனே ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வண்டியை விடுமாறு கூறினேன். அந்த தயாரிப்பாளர் என்னை எந்த இடத்தில் எனக்கு கதாபாத்திரம் இல்லை எனக் கூறினாரோ அதே இடத்திற்கு சென்று 555 சிகரெட் எடுத்து பற்றவைத்து அவர் முன்னால் நின்றேன். அங்கிருந்த எல்லோரும் எனது காரையும் அந்த காரின் ஓட்டுனரையும் பிரமிப்பாக பார்த்தனர். இவை அனைத்தையும் நான் இரண்டே வருடத்தில் செய்து முடித்தேன். அதற்கு காரணம் கடின உழைப்பும் ரசிகர்களின் அன்பும் என கூற அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கரகோஷம் எழும்பியது. அது அடங்க சில மணித்துளிகள் ஆனது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…