பிசாசு 2 படத்தில் பாடும் சூப்பர் சிங்கர் பாடகி..!
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் சூப்பர் சிங்கர் மூலம் புகழ்பெற்ற பிரியங்கா ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முதன் முதலாக இசையமைப்பாளர் கார்த்திகே ராஜா மிஸ்கின் திரைப்படத்திற்காக இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகிய பாடகி பிரியங்கா ஒரு பாடலை பாடியுள்ளார். பிரியங்காவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் மிஷ்கின் தனது ட்வீட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.
அதில் ” இன்று நடந்த பாடல்பதிவில் மேன்மையாகப் பாடிய பிரியங்காவிற்கு நன்றி. மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த ஆடியோ இன்ஜினியர் திரு பிஜு ஜேம்ஸுக்கு நன்றி. பிரியங்கா என்ற கான குயிலைப் பெற்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளர்.
இன்று நடந்த பாடல்பதிவில் மேன்மையாகப் பாடிய பிரியங்காவிற்கு நன்றி. மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த ஆடியோ இன்ஜினியர் திரு பிஜு ஜேம்ஸுக்கு நன்றி.
பிரியங்கா என்ற கான குயிலைப் பெற்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் நன்றி.
– மிஷ்கின்#supersingerpriyanka @Lv_Sri @PRO_Priya pic.twitter.com/Fe1MqoE8Ek— Mysskin (@DirectorMysskin) December 14, 2020