நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன் படத்தின் டிரைலர் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த், அஸ்வின் ராஜா, சோயா ஹுசைன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு உலகம் முழுவதும் உள்ள காட்டு பகுதியில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்திற்கான படப்பிடிக்கு முடிந்து கடத்த ஆண்டே இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட காரணத்தால் வெளியாகவில்லை.
அதற்கு பிறகு கடந்த மாதம் இந்த திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான டிரைலர் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதற்கான சில போஸ்டர்களும் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் , தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது.
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…