தளபதியுடன் இணையும் வெற்றிமாறன்….வெளியான சூப்பர் தகவல்..!

Default Image

நடிகர் விஜயின் 67 வது திரைப்படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் விஜயின் 66 வது திரைப்படங்கள் குறித்த தகவல் சமூக வளைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது ஆம் விஜயின் 66 வது படத்தை மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனரகராஜ் இயக்குவதாகவும், அட்லீ இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தற்போது தளபதி விஜயின் 67 வது படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ளதாகவும் அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்