ஆயுத பூஜையை டார்கெட் செய்த எனிமி.! வெளியான சூப்பர் தகவல்.!

Default Image

எனிமி திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுதபூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “எனிமி“. படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

இந்த நிலையில், எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுதபூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்