மூன்றாவது முறையாக இணையும் சூப்பர் கூட்டணி.! ‘தல 61’ குறித்து வெளியான மாஸ் தகவல்.!
தல அஜித்தின் அடுத்த படத்தினையும் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
தற்போது நடைபெற்று வரும வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் ,ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும்,விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் போனி கபூர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதுவரை இந்த படத்தின் டைட்டிலை தவிர எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.எனவே தல ரசிகர்கள் முதல்வர் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் வலிமை அப்டேட்டை கேட்டு வருகின்றனர். விரைவில் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது தல அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன .
அதாவது தல அஜித்தின் அடுத்த படத்தினையும் எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .ஆம் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்,வலிமை படத்தின் ரிலீஸை தொடர்ந்து இந்த படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.