பிக்பாஸ் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் ‘PUBG’ படத்திலுள்ள ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடவுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG). இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த திரில்லர் படமாகும். இதில் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்து மேலும் ஐந்து கதாநாயகிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனித்ரா, ஷாந்தினி, ரித்திகா, லியானா ஜான் ஆகியோர் ஆவர். மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன் மற்றும் பிக்பாஸ் 1 பிரபலமான ஜூலி, ஆரத்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குநரான விஜய் ஸ்ரீ 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தாதா 87’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும், ‘நோ சூடு, நோ சொரனை’ என்ற பாடலும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளதாகவும், விரைவில் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடுவதற்காக சன்னி லியோனை அணுகியதாகவும், அதற்கு அவர் ஒப்பு கொண்டதாகவும், விரைவில் அதனை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவரும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சன்னி லியோன் வடகறி என்ற தமிழ் படத்தில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சன்னி லியோன் தற்போது வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடித்தும் வருகிறார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…