சன்னி லியோன் தற்போது இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது மீண்டும் இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதில் ஒரு திரைப்படத்தை யுவன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவிட் இசையமைக்கிறார். மேலும் படத்தில் சதிஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் திகிலூட்டும் கவர்ச்சி ராணியாக நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. காமெடி கலந்த திகில் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…