சுனில் செட்ரிக் ஹாட்ரிக் …ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு பெங்களுரு தகுதி….
நேற்று நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில், புனேவை வீழ்த்தி ,பலம்வாய்ந்த பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டு போட்டிகளாக நடைபெறும் இந்த சுற்றின் முதல் போட்டி 0-0 என டிரா ஆனது. அதனால் நேற்று பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தொடர் முழுவதும் அசத்தலாக விளையாடி முதலிடத்தில் இருந்த பெங்களூரு அணி போட்டி துவங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தியது.
15வது நிமிடத்தின் போது, பெங்களூரின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 65வது நிமிடத்தில் பெங்களூருக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, சேத்ரி மீண்டும் கோல் அடித்தார். 82வது நிமிடத்தின் போது, புனேவின் ஜோனாதன் லூகாஸ் கோல் அடித்தார். இன்னும் ஒரு கோல் அடித்து டிரா செய்தால், ‘அவே கோல்’ விதியின் படி, புனே அணி இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், போட்டியின் கடைசி நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆனால், 89வது நிமிடத்தில் சுனில் சேத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்து தனது ஹேட்ட்ரிக்கை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், பெங்களூரை இறுதி சுற்றுக்கும் அழைத்துச் சென்றார்.
மற்றொரு அரையிறுதி சுற்றில், சென்னையின் எஃப்.சி – கோவா விளையாடும் இரண்டாவது போட்டி நாளை இரவு நடைபெறுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.