உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு சுந்தர் பிச்சை கணிப்பு !

Default Image

12-வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர்.இதுவரை நடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி ஏழு புள்ளி பெற்று  முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் “நடப்பு உலகக் கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றன.
ஆனால் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் , இங்கிலாந்து அணியும் தான் மோதும். அப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்