கன்னடாவில் மெகா ஹிட் படமான ‘மாயாபஜார் 2016’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர். சி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர். சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஆக்ஷன்’. தற்போது இவர் அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்த இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சுந்தர். சி – யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட படமான ‘மாயாபஜார் 2016’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர். சி வாங்கியுள்ளதாகவும், இந்த படத்தினை அவரது இணை இயக்குநரான பத்ரி இயக்க சுந்தர். சி அவர்களின் தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினி மூவிஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரசன்னா, யோகி பாபு, ஷாம், அஸ்வின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் ஷூட்டிங் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…