ஊழியர்களுக்கு ரூ.75,000 ஊக்கத்தொகை அளித்த சுந்தர் பிச்சை.! இதுதான் காரணம்.!

Default Image

வீட்டில் இருந்தே பணி புரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக 1,000 டாலர் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து உலக நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து நிறுவங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.அந்த வகையில் சமூக வலையதளங்கள் தற்போது செம்ம ஆக்டிவாக உள்ளது.

இந்நிலையில் google நிறுவனம் ஜூலை-6 தேதி முதல் அலுவலகம் படிப்படியாக தொடங்கும் என தெரிவித்துள்ளது.வீட்டில் இருந்தே பணி புரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக 1,000 டாலர் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.75,612.50 ஆகும்.மேலும் இதை பயன்படுத்தி அலுவலகம் சார்ந்த பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவுதுள்ளார் இந்நிறுவனத்தின் அதிகாரி சுந்தர் பிச்சை.

அலுவலகத்தில் வந்து பணிபுரியும் விரும்பும் பணியாளர்கள்,சுழற்றி அடிப்படியில் படிப்படியாக அலுவலகத்தில் அனுமதிக்கபடுவர்.இந்த ஆண்டில் நிறய பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டிய சுழல் இருப்பதால் 1,000 டாலர் வழங்க முடிவு செய்ய்ப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணிபுரிவதால் பர்னிச்சர் போன்றவற்றை வாங்குவதற்கு உதவியாக இத்தொகை பயன்படும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்