சூப்பர் ஸ்டார் படத்தை தொடர்ந்து தனுஷின் புதிய படத்தை தயாரிக்க உள்ள சன் பிக்ச்சர்ஸ்!
- சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168வது திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது.
- தனுஷின் 44வது திரைப்படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தளபதி விஜயின் சர்கார் மூலம் மீண்டும் சினிமா தயாரிப்பில் களமிறங்கியது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை என வரிசையாக பட தயாரிப்பில் வெற்றிகொண்டது.
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்து உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளாராம். இப்படம் தனுஷின் 44வது படமாக உருவாக உள்ளதாம். இப்படத்தை யார் இயக்க உள்ளார் என்ற விவரம் இன்னும் கூறப்படவில்லை.