6 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற சுல்தான் டீசர்…!
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் யூடியூபில் தற்போது 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது.
அதற்கு பிறகு படத்திலிருந்து படக்குழுவினர் எந்த ஒரு அப்டேட்டும் விடாமல் இருந்தனர். அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகுமென்று டீசர் வெயீட்டு படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது அந்த டீசர் யூடியூபில் தற்போது 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை கார்த்தி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
#Sulthan Teaser crossing 6M views
???????? #JaiSulthan ????#SulthanTeaser▶️ https://t.co/ap7fSxv44n #சுல்தான் #SulthanFromApril2 pic.twitter.com/S242hR3eqG— DreamWarriorPictures (@DreamWarriorpic) February 4, 2021