ஈரான் தளபதி சுலைமானி குறித்து அமெரிக்கா ,இஸ்ரேல் ,உள்ளிட்ட நாடுகளுக்கு உளவுபார்த்ததாக தூக்கு தண்டனையை ஒருவருக்கு ஈரான் அரசு நிறைவேற்றி உள்ளது.
ஈரான் நாட்டின் ராணுவ தலைமை தளபதி சுலைமானி கடந்த ஜனவரி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அந்நாடு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் சுலைமானி குறித்த தகவலை எல்லாம் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக மஹ்மூத் மவ்சாவி மஜித் என்பவரை ஈரான் கடந்த மாத இறுதியில் அதிரடியாக கைது செய்து இருந்தது.
சிஐஏ மற்றும் மொசாட் என்ற உளவு அமைப்புகளில் பணியாற்றியவர் இவர் மேலும் சுலைமானியின் வாகனப் பயணம் குறித்த தகவலை அமெரிக்க தந்ததாக இவர் மீது குற்றம் சாட்டு எழுந்தது.
இது தொடர்பான விசாரணையில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…