காபூல் கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடக நிறுவனமான டோலோ நியூஸ் தனது ட்விட்டரில், காஜ் கல்வி மையத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்காக மையத்திற்கு வந்ததாக காபூல் பாதுகாப்புக் கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் கல்வி நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை காபூல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…