சூடு நீரில் குளிப்பது நல்லதா ? கெட்டதா ?
குளியல் என்பது நம் உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய ஒன்று. இதில் நாம் அநேகர் சுடு நீரில் குளிப்பது தான் வழக்கம். ஏனென்றால் சிறு வயதிலிருந்தே அப்படியே பழகி விட்டதால், குளிர் நீர் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என்ற நிலைக்கு வந்து விடுகிறோம். வயது முதிர்ந்தவர்கள் குளிப்பது பரவாயில்லை. ஏனென்றால் அவர்கள் உடல் தளர்ந்த நிலையில் இருப்பதால் சூடு நீர் குளியல் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
மருத்துவர்களின் கருத்துப்படி சூடு நீரில் குளித்தால் உடலுக்கு முக்கியமாக தசைகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறுகின்றனர். சூடு நீரில் குளிப்பதால் உடல் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இது நல்லது என்றாலும் தலையில் சூடு நீர் ஊற்றி குளிக்கும் போது முடியின் வேர் பகுதி விரைவாக காய்ந்து சிடுவதால், முடிகள் உடையவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.