பிரபல தொகுப்பாளினிக்கு திடீரென நடந்த திருமணம்.! அதிர்ச்சி அடைந்த
- தொகுப்பாளி திவ்யா கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை.
- கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி திவ்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது. “வில்லு” படத்தில் “தீம்தனக்கா தில்லானா” என்ற பாடல் மூலம் பாடகராகவும் அறிமுகமானார்.
முன்பு ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர் திவ்யா. பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சியில் திவ்யாவை காணமுடியவில்லை.
அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் திடீரென கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி திவ்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது.இந்தத் திருமண நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிசரண், விஜய் யேசுதாஸ், நரேஷ் ஐயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திவ்யா தனது நீண்ட நாள் நண்பரான ஷிபு தரகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்தின் போது எடுக்கபட்ட புகைப்படகளை பாடகர் ஹரிசரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதனைத் தொடர்ந்து திவ்யாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திவ்யா விஜய் நடித்த “வில்லு” படத்தில் “தீம்தனக்கா தில்லானா” என்ற பாடல் மூலம் பாடகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.