நியூசிலாந்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வக்காரி எரிமலை இது வெள்ளை நிறத்தில் தீவு போன்று காட்சியளிப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். திடீரென எரிமலை வெடித்து சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் வானில் சுமார் 12,000 அடி உயரத்துக்கு வெண் புகை பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே சுற்றுலாப்பயணிகள் எரிமலையை காண சென்ற ஏராளமானவர்கள் தீவில் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் தகவலறிந்து வந்த மீட்பு படை வீரர்கள் தீவில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். காப்பாற்றப்பட்ட பலர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தீவுக்கு சுற்றுலா சென்ற பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுயுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மீட்பு பணி மிகவும் சவாலாக இருக்கும் என மீட்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தெரிவித்துள்ளார். எரிமலை சீற்றத்தில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…