திடீரென எரிமலை வெடித்ததால் சுற்றுலா சென்ற 5 பேர் பலி.! ஏராளமானோர் படுகாயம்..!

Default Image
  • நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் 5 பேர் பலி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்.
  • வானில் சுமார் 12,000 அடி உயரத்துக்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
  • படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வக்காரி எரிமலை இது வெள்ளை நிறத்தில் தீவு போன்று காட்சியளிப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். திடீரென எரிமலை வெடித்து சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் வானில் சுமார் 12,000 அடி உயரத்துக்கு வெண் புகை பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே சுற்றுலாப்பயணிகள் எரிமலையை காண சென்ற ஏராளமானவர்கள் தீவில் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் தகவலறிந்து வந்த மீட்பு படை வீரர்கள் தீவில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். காப்பாற்றப்பட்ட பலர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தீவுக்கு சுற்றுலா சென்ற பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுயுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மீட்பு பணி மிகவும் சவாலாக இருக்கும் என மீட்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தெரிவித்துள்ளார். எரிமலை சீற்றத்தில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்