திடீர் திருப்பம்.! சூர்யாவிற்கு பதில் மக்கள் செல்வன்.? லோகேஷின் மாஸ்டர் பிளான்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை முடித்து விட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும், படத்தை, மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் இணைந்து தொடங்கிய Rain On Films தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் இயக்கும் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார்.