கலிபோர்னியாவின் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி திடீர் ராஜினாமா.!
சமீபத்தில் சீனாவை தலைமையிடமாக கொண்ட டிக் டாக், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு பாதுகாப்புக்கு கருதி இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவும் பாதுகாப்பைக் கருதி டிக்டாக் செயலிக்கு தடை செய்ய முடிவு செய்தது.
இதனால், டிக்டாக்கை அமெரிக்காவில் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு விற்க வேண்டும், இல்லையென்றால் தடைவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவின் குற்றசாட்டை மறுத்து வருகிறது.
மேலும், டிக்டாக் தடைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் பைட்டன்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், டிக்டாக் அலுவலகம் கலிபோர்னியாவில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கெவின் மேயர் தனது ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் “கனத்த இதயத்தோடு நான் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.