பெண் குழந்தை கல்விக்காக போராடிய மலாலாவுக்கு திடீர் திருமணம் ….!
பெண் குழந்தை கல்விக்காக போராடி, நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய இளம் பெண் தான் மலாலா யூசுப். இவர் மீது தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலில் இவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் உலக அளவில் பேசப்பட்டதையடுத்து மலாலா பலராலும் புகழப்பட்டார்.
மேலும் இவர் தனது 16 வது வயதிலேயே பாலின சமத்துவ அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றிய நிலையில், இவர் பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அசர் என்பவருடன் மலாலாவுக்கு நேற்று எளிய முறையில் இங்கிலாந்தில் வைத்து திருமணம் நடந்ததாக தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மலாலாவும் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள். நானும் அசரும் வாழ்க்கை துணையாக இருக்க முடிவு செய்துள்ளோம். எனவே என் குடும்பத்துடன் சிறிய நிக்கா விழாவை கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்கு அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
Today marks a precious day in my life.
Asser and I tied the knot to be partners for life. We celebrated a small nikkah ceremony at home in Birmingham with our families. Please send us your prayers. We are excited to walk together for the journey ahead.
????: @malinfezehai pic.twitter.com/SNRgm3ufWP— Malala (@Malala) November 9, 2021