ரம்யா கிருஷ்ணன் தனது மகன் இன்று 16-வது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறி மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
படையப்பா என்ற படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்ததன் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணன் அதன் பின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,நாயகியாகவும் நடித்தார் . சமீபத்தில் இவர் பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களில் சிவகாமி தேவியாக நடித்து உலக அளவில் புகழ் பெற்றார் .
கடந்த 2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது ரித்விக் கிருஷ்ணா என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று ரம்யா கிருஷ்ணனின் மகன் 16-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் .தனது கணவன் , மகனுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து ரம்யா கிருஷ்ணன் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்றும் பார்க்க இளமையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி கமென்ட் செய்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…