பென்டகன் மெட்ரோ நிலையம் அருகே பல துப்பாக்கிச் சூடுகள் காரணமாக பூட்டுதலுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு.
அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன், தலைநகர் வாஷிங்டனின் அர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதி நவீன ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனில் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டியிருக்கும். இந்த சூழலில், கடந்த செவ்வாக்கிழமை பென்டகன் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் (டிரான்ஸிட் சென்டர்) துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
ரயில் நிலையத்தில் அடுத்தத்தடுத்து சில முறை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சிலர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்டகனை சுற்றியுள்ள பகுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பென்டகன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி, பொதுமக்கள் அந்த பகுதிக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் Pentagon’s security force ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பென்டகன், அருகிலுள்ள மெட்ரோ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சிறிது நேரம் பூட்டப்பட்டதை தொடர்ந்து, கட்டிடத்தின் பாதுகாப்பை மேற்பார்வையிடும் பென்டகன் படை பாதுகாப்பு முகமை (PFPA), தற்போது பூட்டுதல் நீக்கப்பட்டு கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது என்று அறிவித்துள்ளது.
ஆனால், நடைபாதை 2 மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் நுழைவு மூடப்பட்டுள்ளது. நடைபாதை 3 நடைபாதை போக்குவரத்துக்கு திறந்திருக்கும் என்றும் பென்டகன் பாதுகாப்பு படை நிறுவனம் (Pentagon Force Protection Agency) ட்வீட் செய்துள்ளது. பென்டகன் பாதுகாப்பு படை முகமை மெட்ரோ ரயில் நுழைவாயில் மற்றும் பேருந்து நடைபாதை பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சம்பவம் நடந்த இடம் பாதுகாப்பாக இருப்பதாகவும், மெட்ரோ ரயில் நுழைவாயில் மற்றும் பேருந்து நடைபாதை பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பென்டகனில் போக்குவரத்து பென்டகன் நகரத்திற்கு திருப்பி விடப்படுகிறது என்று மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் பென்டகன் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…