கங்குலி போன்ற வெற்றிகரமான வீரர்கள் அரசியலிலும் நுழையவேண்டும்- திலீப் கோஷ்!

சவுரவ் கங்குலி போன்ற வெற்றி பெற்ற நபர்கள் அரசியலில் நுழைய வேண்டும் என மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷ் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த இருதினங்களுக்கு முன்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமாகிய சவுரவ் கங்குலி அவர்கள் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் அவர்களை நேரில் சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு தொடர்பாக கங்குலி அரசியலில் சேரப் போகிறாரா? எனும் பல்வேறு கேள்விகள் ரசிகர்களுக்கு எழுந்து வந்தது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டத்தில் அனைவரையும் முன்னோக்கி அழைத்துச் செல்ல தனது கட்சி தயாராக இருப்பதாகவும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமாகிய சவுரவ் கங்குலி போன்ற வெற்றிகரமான நபர்கள் அரசியலில் நுழைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025