100-வது நாளில் வெற்றி நடைபோடும் அசுரன்! தயாரிப்பாளரின் அதிரடியான பதிவு!

Default Image
  • 100-வது நாளில் வெற்றி நடைபோடும் அசுரன்.
  • தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் ட்வீட்டர் பதிவு.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில், நடிகை மஞ்சு வாரியார் முதன் முறையாக நடித்துள்ளார். இப்படம் பூமணி எழுதிய வெக்கை புதினத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் திரைக்கு வந்து 100-வது நாளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.தாணு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு என்றும் மகிழ்வுடன் நன்றியுடன் – எஸ்.தாணு’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்