சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த வெற்றிமாறன் பட நடிகை .!
சூர்யாவின் வாடிவாசல் படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்ததை அடுத்து அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்முறையாக ஆண்ட்ரியா சூர்யாவுடன் நடிக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு கதைகளத்தை கொண்டதாகவும், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரராக சூர்யா நடிப்பதாகவும் சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மூலம் உறுதியாகியுள்ளது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.