சுபாஷ் சந்திரபோஸ் தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும்! – ஓபிஎஸ்
“வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளாகிய தேசிய வல்லமை தினத்தில்” அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம் என ஓபிஎஸ் ட்வீட்.
இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசிய இராணுவத்தை உருவாக்கி பிரிட்ஷ் அரசிற்கு எதிராக போராடிய விடுதலை வீரர் “வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளாகிய தேசிய வல்லமை தினத்தில்” அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம்! அவரது தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும்!’ என பதிவிட்டுள்ளார்.
தேசிய இராணுவத்தை உருவாக்கி பிரிட்ஷ் அரசிற்கு எதிராக போராடிய விடுதலை வீரர் “வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளாகிய தேசிய வல்லமை தினத்தில்” அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து வணங்குவோம்! அவரது தியாகம், துணிச்சல் அனைவர் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும்! pic.twitter.com/WXIdmdBFG8
— O Panneerselvam (@OfficeOfOPS) January 23, 2022