அரண்மனை 3 திரைப்படம் வருகின்ற மே மாதம் 12 ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்.
சுந்தர் சி இயக்கத்தில் மிகவும் த்ரில்லாக இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுந்தர் சி முன்றாவது பாகத்தையும் எடுத்துமுடித்துவிட்டார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த மூன்றாவது பாகத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. ஆம் இந்த அரண்மனை 3 திரைப்படம் வருகின்ற மே மாதம் 12 ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…