அந்நியன் பட நடிகையின் அட்டகாசமான புகைப்படங்கள்.!
நடிகை சதாவின் லேட்டஸ்டான மூன்று புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சில தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக தமிழில் கடந்த 2018- ஆம் ஆண்டு வெளியான டார்ச் லைட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை, தெலுங்கில் கிட்டி பார்ட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவ்வபோது நடிகை சதா தான் எடுக்கும் அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகை சதாவின் லேட்டஸ்டான மூன்று புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ, அந்த புகைப்படங்கள்.